மாற்றுத்திறனாளிக்கு, பிரிண்டர் இயந்திரம் வழங்கல்

55பார்த்தது
மாற்றுத்திறனாளிக்கு, பிரிண்டர் இயந்திரம் வழங்கல்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் இணைந்து, பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை என்ற பெயரில், சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  
இந்நிலையில், பேராவூரணி பொன்னாங்கண்ணிக்காடு பகுதியைச் சேர்ந்த பூபதி (வயது 28) எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பணியிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது வலது கை விபத்தில் பறிபோனது. இதையடுத்து அவரால் எலக்ட்ரிசியன் வேலை செய்ய முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில், தனது வாழ்வாதாரத்திற்கு உதவுமாறு பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளையிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து அறக்கட்டளை சார்பில், பூபதி கணினி மையம் அமைக்கத் தேவையான, பிரிண்டர் இயந்திரம், தம்ப் பிரிண்ட் இயந்திரம், லேமினேஷன் இயந்திரம், இதர பொருட்கள் ரூபாய் 35 ஆயிரம் மதிப்பீட்டில், அவருக்கு புதிதாக வாங்கி இலவசமாக வழங்கப்பட்டது.  
நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் ஆர். நாகேந்திர குமார் தலைமை வகித்தார். செயலாளர் சண்முகநாதன் வரவேற்றார்.  
நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர் சதீஷ், அறக்கட்டளை பொருளாளர் வன்மீகநாதன் நிர்வாகிகள் முஸ்கிர், வி. ஆர். ஜி. நீலகண்டர், கவின், செந்தில் குமார், மகாராஜா, தாமரைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  
மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி