பேராவூரணி புதிய பேருந்து இயக்கம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

73பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேருந்து நிலையத்தில், புதிய 2 பேருந்துகள் இயக்கத்தை பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  


பேராவூரணியில் இருந்து அதிராம்பட்டினம் செல்லும்  ஏ. 1 மற்றும் பேராவூரணியில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் 428. ஜி ஆகிய இரு பேருந்துகள் வழித்தடத்திலும் இயக்குவதற்காக, அதி நவீன புதிய ரகப் பேருந்துகள், பேராவூரணி அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  


பழைய பேருந்துகளுக்குப் பதிலாக தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த புதிய பேருந்துகளின் இயக்கத்தை, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் வியாழக்கிழமை மாலை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் சற்று தூரம் பேருந்திலும் ஏறி பயணித்தனர்.  


இதில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் க. அன்பழகன், மு. கி. முத்துமாணிக்கம், வை. ரவிச்சந்திரன், தமிழ்நாடு மீனவர் நல வாரிய துணைத் தலைவர் மல்லிப்பட்டினம் தாஜுதீன், அரசு போக்குவரத்து கிளை மேலாளர் மகாலிங்கம், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் முத்துலட்சுமி காளிமுத்து, பேரூராட்சி துணைத்தலைவர் கி. ரெ. பழனிவேல், பேரூராட்சி கவுன்சிலர்கள், வீரியங்கோட்டை சுரேஷ், கட்சி நிர்வாகிகள்,   பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி