திருச்சிற்றம்பலத்தில் ஜூன் 12ம் தேதி மக்கள் நேர்காணல் முகாம்

74பார்த்தது
திருச்சிற்றம்பலத்தில் ஜூன் 12ம் தேதி மக்கள் நேர்காணல் முகாம்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தில் வரும் ஜூன் 12-ம் தேதி மாவட்ட ஆட்சியரின் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், திருச்சிற்றம்பலம் சரகம் திருச்சிற்றம்பலம் கிழக்கு கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரி திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் வரும் 12ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. முகாமில் திருச்சிற்றம்பலம் மற்றும் சுற்றுவட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி