பேராவூரணியில் கார்கில் வெற்றி தின அமைதி ஊர்வலம்

58பார்த்தது
பேராவூரணியில் கார்கில் வெற்றி தின அமைதி ஊர்வலம்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன் சங்கம் மற்றும் ஸ்டார் லயன் சங்கம் சார்பில், கார்கில் போரில் வீர மரணம் அடைந்த போர் வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் பேராவூரணி புதிய பேருந்து நிலையத்திலிருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு அண்ணா சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன் சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் குமார், பொருளாளர் ரவி, ஸ்டார் லயன் சங்க தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் ஆதித்யா, பொருளாளர் சாமியப்பன், லயன் வட்டாரத் தலைவர் பாண்டியராஜன், சாசன தலைவர் நீலகண்டன், மாவட்ட தலைவர்  இளங்கோ, மண்டல ஒருங்கிணைப்பாளர் தெட்சிணாமூர்த்தி, முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க தலைவர் நீலகண்ட சேகரன், செயலாளர் பாலதண்டாயுதம்,  
நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி