மேட்டூர் அணையிலிருந்து
டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 2, 000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததாலும், தமிழகத்துக்கு உரிய நீரை காவிரியில் கர்நாடகா வழங்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 154 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 139 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து நீர் வெளியேற்றப்
படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் சரிந்து
வருகிறது. நீர் இருப்பைக் கருத்தில் கொண்டு படிப்படியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 4-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டாவுக்கான நீர் திறப்பு விநாடிக்கு 6, 500 கனஅடியாக இருந்தது. கடந்த 5-ம் தேதி விநாடிக்கு 4, 000 கனஅடியாகவும், 6-ம் தேதி 3 ஆயிரம் கனஅடி யாகவும், நேற்று முன்தினம் 2, 300 கனஅடியாகவும், நேற்று மதியம் முதல் நீர் திறப்பு 2, 000 கன அடியாகவும் குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 31. 72 அடி. நீர் இருப்பு 8. 22 டிஎம்சி உள்ளது. தஞ்சை மாவட்ட கடைமடை பகுதியான பேராவூரணி சேதுபாவாசத்திரம் பகுதிகளில் இந்த ஆண்டு காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்படாததால் விவசாயம் நடைபெறாமல் உள்ளது இந்நிலையில் தற்போது பாசனத்திற்கான தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளதால் சாகுபடி கைவிட்டு போனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.