மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் தேவையா?

563பார்த்தது
மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் தேவையா?
தேசிய வருவாய் வழி உதவித் தொகைக்கான திறனாய்வு தேர்வை மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும், பேராவூரணி மற்றும் திருச்சிற்றம்பலத்தில் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.  ஒவ்வொரு ஆண்டு, ம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி உதவித் தொகைக்கான திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் தலா, ரூ. ஆயிரம் வீதம்,  4 ஆண்டுகளுக்கு ரூ. 48 ஆயிரம் வழங்கப்படும்.  


2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 ஆம்தேதி நடைபெற உள்ள திறனாய்வு தேர்வில், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.  
பேராவூரணி மற்றும் திருச்சிற்றம்பலம் அரசு பள்ளிகளில் நடைபெற்ற சிறப்பு வகுப்பில் ஓய்வுபெற்ற வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி. சவுந்தரராஜன் கலந்து கொண்டு மாணவர்கள் திறனாய்வு தேர்வை எளிதாக எதிர்கொள்வது எப்படி என்று பேசி, மாதிரித்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம், தலைமை ஆசிரியர்கள் கண்ணன், நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி