தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வணிகவியல் துறை மன்றக் கூட்டம், ஆ கல்லூரி முதல்வர் முனைவர் திருமலைச்சாமி தலைமையில் நடைபெற்றது.
வணிகவியல் துறை தலைவர் முனைவர் நா. பழனிவேலு வரவேற்றார். தன்னம்பிக்கை பேச்சாளர் மெய்ச்சுடர் நா. வெங்கடேசன் கலந்து கொண்டு, அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது எவ்வாறு, தொழில் முனைவோராக தங்களை உருவாக்கி கொள்ளும் வழிமுறைகள் குறித்து உரையாற்றினார்.
நிறைவாக பேராசிரியர் முத்துக்கிருஷ்ணன் நன்றி கூறினார். நிகழ்வில் வணிகவியல் துறையைச் சேர்ந்த 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.