குத்தாலம் வள்ளுவர் தெருவைச் சேர்ந்த தனபால் மகன் மூர்த்தி(எ) கலியமூர்த்தி(30). இவர் கடந்த 20ம் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் திங்களூர் ஆர்ச் அருகே அப்பாச்சி பைக்கை தள்ளிக்கொண்டு வந்து அதில் இருந்த பிளக்கை பிடுங்க முயன்று கொண்டிருந்தார். அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருவையாறு போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த பைக் திருவையாறு பள்ளிச்சந்து பகுதியை சேர்ந்த விஜய்(30) என்பவருக்கு சொந்தமானது என்பதும் அதனை திருடிக்கொண்டு வந்ததும் விளங்கியது. இவர் மீது சென்னை மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷனில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து மூர்த்தி(எ) கலியமூர்த்தியை இன்ஸ்பெக்டர் சர்மிளா மற்றும் போலீசார் கைது செய்தனர்.