அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் வீணாகும் கழிப்பறை கட்டிடம்

81பார்த்தது
அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் வீணாகும் கழிப்பறை கட்டிடம்
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடம் திறக்கப்படாமலேயே சேதமடைந்து வருகிறது. எனவே அதனை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்குடி திருவாரூர் அகல ரயில் பாதை வழித்தடத்தில் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக கட்டப்பட்ட கட்டண கழிப்பறை பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட கழிப்பறை கட்டணம் பயன்பாட்டுக்கு வராமல் வீணாகி வருவதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் ரயில் நிலையத்தில் உள்ள குடிநீர் குழாய் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் மக்களால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ள கழிப்பறை கட்டிடத்தை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும். குடிநீர் குழாய்களை சீரமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி