விஜயை கண்டு நாங்கள் பயப்படவில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, "நடிகர் விஜய் கட்சி தொடங்கியதால் எங்களுக்கு பதற்றம் இல்லை. அவரை கண்டு நாங்கள் பயப்படவில்லை. எங்களுக்கு கவலையும் இல்லை. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும். திமுக மீண்டும் வெற்றிபெற்று 2ஆவது முறையாக ஸ்டாலின் முதல்வராவார்" என்று உறுதிப்பட கூறியுள்ளார்.