தஞ்சை: அனுமதியின்றி விளம்பர தட்டி வைத்தால் நடவடிக்கை - ஆணையர்

59பார்த்தது
தஞ்சை: அனுமதியின்றி விளம்பர தட்டி வைத்தால் நடவடிக்கை - ஆணையர்
பட்டுக்கோட்டையில் பொதுமக்களுக்கு இடையூறாக அனுமதி இன்றி விளம்பர பலகைகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் கனிராஜ் எச்சரிக்கை எடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி பட்டுக்கோட்டை நகராட்சி எல்லைக்கு உட்பட்ட தஞ்சை சாலை, அதிராம்பட்டினம் சாலை, முத்துப்பேட்டை சாலை, போஸ்ட் ஆபீஸ் சாலை, அறந்தாங்கி முக்கம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் விளம்பரப் பதாகைகள் அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்தன. இதை பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையாளர் அறிவுரையின்படி, போலீசாரின் ஒத்துழைப்புடன், பட்டுக்கோட்டை நகராட்சி சுகாதார அலுவலர், பட்டுக்கோட்டை நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் மற்றும் நகராட்சி பணியாளர் ஆய்வு மேற்கொண்டு அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகளை அகற்றினர்.

மேலும் தற்சமயம் பண்டிகைக்காலமாக உள்ளதால் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விளம்பர பதாகைகள் வைக்க நகராட்சியால் ஒரு மாத காலத்திற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்பட மாட்டாது. பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதி இன்றி விளம்பரப் பலகைகள் வைக்கக்கூடாது, தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படுவதோடு நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி