முன்னாள் செபி தலைவர் மீது எப்ஐஆர் பதிய நீதிமன்றம் உத்தரவு

66பார்த்தது
முன்னாள் செபி தலைவர் மீது எப்ஐஆர் பதிய நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் செபி தலைவர் மாதபி புரி புச் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாதபி பூரி புச் மற்றும் 5 பேர் மீது பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என பத்திரிகையாளர் ஒருவர் மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில், நீதிபதி சஷிகாந்த் ஏக்நாத்ராவ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதானி குழும பங்குச்சந்தை முறைகேட்டில் மாதபி பூரி புச்சுக்கு தொடர்பு இருப்பதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி