தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் பணிநிறைவு

62பார்த்தது
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் பணிநிறைவு
தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியம், இரும்புதலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் மா. சாமிநாதன் பணி நிறைவு பாராட்டு விழா சாலியமங்களம் தனியார் மண்டபத்தில் துரைநடராஜன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் அவருக்கு ஊழியர்கள் சார்பில் ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனர்.   விழாவின் முன்னதாக நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு மவுன அஞ்சலிசெலுத்தப்பட்டது. விழாவில் அம்மாபேட்டை ஒன்றியப்பெருந்தலைவர் கே. வீ. கலைச்செல்வன், திமுக ஒன்றிய செயலாளர் தியாக சுரேஷ் மற்றும்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள்  சங்க மாநில நிர்வாகிகள், பல்வேறு கூட்டுறவு சங்க ஊழியர்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.