அய்யம்பேட்டை அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு.

2257பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், கலக்குடி, கன்னிதோப்பு மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் சிவா (28), இவருக்கு பிரியதர்ஷினி (26) என்ற மனைவியும், தஷ்வந்த் (06) என்ற மகனும் இருந்து வருகின்றனர். இவர்கள் மூவரும்  அய்யம்பேட்டை அருகே அரியமங்கையில்  அவரது உறவினர் வீட்டிற்கு இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அய்யம்பேட்டை ரயில்வே கேட்டை அவரது மனைவி கடந்த நிலையில், சிவாவும் அவரது மகனும் ரயில் வருவதை கவனிக்காமல், ரயில்வே டிராக்கை  கடக்க முயற்சி செய்தனர்.

அப்போது மயிலாடுதுறையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற சஹாப்தி  எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிவா பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவரது மகன் தஷ்வந்த்தை  காயங்களுடன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி