உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமானது ஒருவருடைய உயரத்திற்கும் புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது. ஒருவருடைய உயரம் காரணமாக அவருக்கு கணையம், கர்ப்பப்பை, ப்ராஸ்டேட், சிறுநீரகம் தோல் மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அந்த நிறுவனம் கூறுகிறது. உயரமான நபர்களுக்கு அதிக செல்கள் இருப்பதாகவும் அந்த செல்களால் எந்த அளவுக்கு ஜீன்கள் சேதமடைகிறதோ புற்றுநோய் உருவாகலாம் என கூறப்படுகிறது.