மஞ்சள் நோய் தாக்குதல் உளுந்துபயிர் பாதிப்பு  விவசாயிகள் கவலை

60பார்த்தது
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் அருகே உள்ள பட்டுக்குடி புத்தூர், கருப்பூர் குடிகாடு உள்ளிகடை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50 ஏக்கர் பரப்பளவில் உளுந்து பயிர் பயிரிடப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் உளுந்து  பயிர்களில் ஒரு விதமான மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டு உளுந்து பயிர் வளர்ச்சி குன்றி காய்ப்புத் தன்மையின்றி உள்ளது
ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்த விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
இதனால் பயிர்களை வயலிலேயே அழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  
பாதிக்கப்பட்ட விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனையுடன் கூறுவதோடு பாதிக்கப்பட்ட உளுந்து பயிரை வேளாண் துறை அதிகாரிகள் பார்வையிட்டு விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி