நாடு முழுவதும் இன்று (செப்.7) விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயருக்கு பிடித்த உணவுகளை படைத்து வழிபட்டு வருகின்றனர். இன்று மாலை நேரத்தில் பிள்ளையார் கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பானது. இந்த நிலையில், சென்னை அம்பத்தூரில் சுமார் 500 கிலோ மைசூர் பாக்கில் விநாயகர் சிலை உருவாக்கப்பட்டு, அதனை வழிபாடு செய்து வருகின்றனர். இந்த மைசூர் பாக் விநாயகரைக் காண பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர்.