மாற்றுத்திறனாளிகளை மிக மோசமாக பேசிய பிற்போக்குத்தனமான கருத்துக்களை பேசும் ஆன்மீக சொற்பொழிவாளரும், பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனருமான மகாவிஷ்ணு என்பவரை தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து சென்னைக்கு இன்று (செப்., 7) திரும்பிய அவரை விமான நிலையத்திலேயே வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதை தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளது.