குடியிருப்பு பகுதிகளில் உள்ள குப்பைகிடங்கை மாற்ற சாலை மறியல்

80பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளியில் சுமார் 10-ஆயிரத்திற்க்கும்  மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதிகளில் தினசரி அள்ளப்படும் குப்பைகளை  சாதிக்நகர் பின்புறம்  அமைந்துள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுவதாகவும், சுற்றிலும் பொதுமக்கள் வசிக்கும்  பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயங்களும், தொடர்ந்து தெருநாய்கள் கடியின் பாதிப்புகள் இருந்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் எவ்வித பயனும் ஏற்படவில்லை எனக் கூறி, சக்கராப்பள்ளியின்  ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து, தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையான சக்கராப்பள்ளி பகுதியின் சாலையில் அமர்ந்து அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் அசோக் தலைமையிலான போலீசார், வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் சம்பந்தப்பட்ட போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி