அருள்மிகு ஸ்ரீவீரமாகாளியம்மன் ஆலய பால்குட திருவிழா

69பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருப்பாலைத்துறை அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக திருப்பாலைத்துறை குடமுருட்டி ஆறு கம்பிபடித்துறையிலிருந்து பக்தர்கள் பால்குடம் மற்றும் அழகு காவடிகள் எடுத்து வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வளம் வந்து கோவிலை வந்தடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம்  ஆராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் கஞ்சிவாத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பாலைத்துறை பரம்பரை அறங்காவலர்கள், நாட்டாமைகள், கிராமவாசிகள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி