உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு,
கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் சார்பில் நிறுவனர் திருவடிகுடில் சுவாமிகள்
கும்பகோணம் மாநகராட்சியில் செயல்பட்டு வரும் பாதாள சாக்கடை கழிவுநீரேற்றல், மறுசுழற்சி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் 10 பேருக்கு
தூய்மைப் பணியின் முக்கியத்துவம் கருதி நன்றி தெரிவித்தார், மேலும் அவர்களுக்கு
கைத்தறி ஆடை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் பாராட்டி சிறப்பு செய்து கூறுகையில்
கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைகளை பயன்படுத்துவோர் கழிவுநீரை வீட்டிலிருந்து அப்புறப்படுத்துவதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறோம். ஆனால் அதனை உரிய முறையில் வெளியேற்றி, மறுசுழற்சிக்கு உட்படுத்துவதில் இத்தனை பேர் பாடுபட வேண்டி உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.
சுற்றுப்புற சூழல் என்பது சமூகத்தில் உள்ள, வேலைப்பளுவை பகிர்ந்து கொள்வதிலும் சக தொழிலாளிகளை மதித்து நன்றி செலுத்துவதிலும் தான் நிறைவு பெறுகிறது என்று கூறினார்.
மீட் அமைப்பின் சபாபதி உட்பட பலர் உடன் இருந்தனர்.