ஆதார் திருத்த, பதிவு சேவை எல்லா நாட்களிலும் நடைபெறுகிறது.

54பார்த்தது
ஆதார் திருத்த, பதிவு சேவை எல்லா நாட்களிலும் நடைபெறுகிறது.
பாபநாசம் தலைமை  அஞ்சலக அதிகாரி சுமதி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: -
பாபநாசம் தலைமை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் சேவை ( புகைப்பட மாறுதல் உட்பட) நடைபெறுகிறது.
இச்சேவை அனைத்து நாட்களிலும் ஞாயிற்றுக்கிழமை உட்பட காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.
புதிதாக ஆதார் பதிவு செய்யவும் பழைய ஆதாரில் திருத்தங்கள் செய்யவும் மற்றும் புதிய சேமிப்பு கணக்குகள் துவங்கவும் அஞ்சலகத்தை அணுகி பயன்பெறலாம்.
புதிதாக ஆதார் அட்டை எடுக்க கட்டணம் ஏதும் இல்லை, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய ரூ. 50 மட்டும் மேலும் புகைப்படம் மற்றும் கைரேகை மேம்படுத்த ரூ. 100 கட்டணம் செலுத்த வேண்டும்.
மொபைல் எண்ணை மாற்றம் செய்ய ஆவணங்கள் தேவையில்லை ,
குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் எடுக்க குழந்தையின் பிறப்பு சான்றிதழ் அசல் மற்றும் குழந்தை தாய் அல்லது தந்தை ஆதார் அட்டை அசல் எடுத்து வரவும் இந்த ஆதார் பதிவு மற்றும் திருத்தம் சிறப்பு சேவை  முகாமினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளபடுகிறார்கள் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you