ஒரத்தநாடு: சாலையில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் சிரமம்
ஒரத்தநாடு வட்டம் மேலஉளூர் ஆழியவாய்க்கால் கிராமச் சாலையில், மேலஉளூர் நடுத் தெருவில், 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள், மாணவ,மாணவிகள் சிரமமடைந்து வருகின்றனர். எனவே, சாலையில் தேங்கும் மழைநீரை அகற்றும் வகையில், அங்கு நிரந்தரமாக வடிகால் வசதி ஏற்படுத்திதர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.