திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அதிமுக சார்பில் நேற்று (நவ. 17) பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் கட்சி தொண்டர்களுடன் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பின்னர் அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிகளை அவர்கள் எடுத்து சென்றதை காண முடிந்தது.