தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தஞ்சையில் நடந்தது. சங்க மாநிலத் தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் தர்மராஜா
வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாநில பொருளாளர் செந்தில்குமார் நிதி அறிக்கை தாக்கல் செய்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் குமார், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க தஞ்சை மாவட்ட செயலர் பாஸ்கரன் ஆகியோர் பேசினர். ஊராட்சி செயலாளர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருவதுடன், தற்போது பதிவறை எழுத்தர்களுக்கு வழங்கப்படும் காலமுறை ஊதியம் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் அதாவது கலெக்டர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊரக வளர்ச்சி இயக்குனர் அலுவலகங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கு வழங்கப்படும் அனைத்து அரசு சலுகைகளையும் ஊராட்சி செயலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 16ம் தேதி சென்னையில் மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப் பட்டன.
சங்க மாநில பிரச்சார செயலர் முருகானந்தம் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் பிரஷ்நேவ் நன்றி கூறினார்.