ஆடுதுறையில் சிசிடிவி கேமரா அமைத்து துவக்கவிழா

59பார்த்தது
ஆடுதுறை பேரூராட்சி மற்றும் பொதுமக்களின் பங்கோடு 18லட்சம் மதிப்பீட்டில் ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம், கடைவீதி, தரங்கம்பாடி சாலை, மயிலாடுதுறை சாலை, கும்பகோணம் சாலை, கல்லணை பூம்புகார் சாலை சந்திப்பு, ரயில்நிலைய சாலை, நெல் ஆராய்ச்சி நிலைய சாலை உள்ளிட்ட முக்கிய இடங்கள், மற்றும் அனைத்து வார்டுகளிலும் 60க்கும் மேற்பட்ட உயர் ரக கேமராக்கள் பொருத்தப்பட்டு 24மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் பேரூராட்சி அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சிசிடிவி கேமரா துவக்க விழா பேரூராட்சி பெருந்தலைவர் ம. க. ஸ்டாலின் தலைமையில் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் ராமபிரசாத் வரவேற்றார். பேரூராட்சி துணை பெருந்தலைவர் கமலா சேகர் முன்னிலை வகித்தார். திருவிடைமருதூர் சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக், திருவிடைமருதூர் வட்டாட்சியர் பாக்யராஜ் ஆகியோர் சிசிடிவி கேமரா பணிகளை துவக்கி வைத்தனர்.
திருச்சி அகில இந்திய வானொலி நிலையம் தாமஸ் பாஸ்கர், கவுன்சிலர்கள் கோசி. இளங்கோவன், முத்துபீவி ஷாஜகான், மீனாட்சி முனுசாமி, சரவணன், செல்வராணி சிவகுமார், சுகந்தி சுப்ரமணியன், பரமேஸ்வரி சரவணகுமார், சாந்தி குமார், சமீம் நிஷா ஷாஜகான், கண்ணன், ம. க‌. பாலதண்டாயுதம், மாலதி சிவக்கொழுந்து, குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இளநிலை பொறியாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி