ரஜினி படத்துக்கு ஆடிஷன் - பணத்தைப் பறித்த கும்பல்

543பார்த்தது
ரஜினி படத்துக்கு ஆடிஷன் - பணத்தைப் பறித்த கும்பல்
ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் 'தலைவர் 171' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இதை வைத்து சில மோசடி பேர்வழிகள் பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் படத்தில் நடிக்க ஆர்வமுள்ளவர்களுக்கான ஆடிஷன் பெங்களூருவில் நடைபெற்று வருவதாக ஒரு பதிவு வெளியானது. இதை நம்பி ஆடிஷனுக்குச் சென்றவர்களிடையே பணம் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மிருதுளா என்ற பெண் போலீஸை அணுகியபோதுதான் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. மிருதுளாவிடம் இருந்து அந்த கும்பல் ரூ.3.9 லட்சத்தை எடுத்ததாக கூறினார்.

தொடர்புடைய செய்தி