தஞ்சாவூர்: கஞ்சா வியாபாரி, பாலியல் குற்றவாளி உள்பட மூவருக்கு குண்டாஸ்

83பார்த்தது
தஞ்சாவூர்: கஞ்சா வியாபாரி, பாலியல் குற்றவாளி உள்பட மூவருக்கு குண்டாஸ்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள், பாலியல் குற்றவாளிகள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பெரியார் நகரை சேர்த்தவர் சங்கர் மகன் ராஜபாண்டியன் (வயது 33) புதுக்கோட்டையை அடுத்த பெருமாள்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் மோகன் மகன் தவமணி (20) இவர்கள் 2 பேரும் கஞ்சா வியாபாரி. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஆச்சாள்புரம் தண்டேசநல்லூர் மேலத் தெருவை சேர்த்தவர் செல்வராஜ் மகன் தமிழ் என்ற தமிழரசன் (வயது 33) பாலியல் குற்றவாளி, இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட எஸ்பி ஆஷிஷ்ராவத், தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திற்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அதிராம் பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக் டர் பசுபதி ஆகியோர் குண்டர் சட்டத்தில் ராஜபாண்டியன் தவமணி, தமிழ் என்ற தமிழரசன் ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி