தமிழக நலிவுற்ற விவ சாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் முகமது இப்ராஹிம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி வட்டம் முக்கிய பகுதியாகும். இந்த பேராவூரணி பேரூராட்சியாகவும் தாலுகாவாகவும் உள்ளது. பேராவூரணியில் வட்டாட்சியர் அலுவலகம், பேராவூரணி பேரூராட்சி அலுவலகம், மின்சாரத்துறை வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகம் என பல்வேறு அரசுதுறை அலுவலங்கள் உள்ளது. பேராவூரணி நகரத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் அரசு ஊழியர்கள், விவசாயிகள், வியாபாரிகள் பல்வேறு பணிக்காக வந்து செல்கின்றனர்.
மேலும் பேருந்துகள், இதர மோட்டார் வாகனங்களும் வந்து போகிறது. எனவே இந்த பகுதியில் பொது மக்களுக்கும் பேருந்துகளுக்கும் மற்றும் இதர வாகனங்களுக்கு இடையூறாக பகல் இரவு நேரங்களில் மாடுகள் சாலை நடுவில் கூட்ட கூட்டமாக படுத்து உறங்குவது, சாலையில் கூட்ட கூட்டமாக திரிவது பெரும் பிரச்னையாக இடையூறாக உள்ளது. சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்காது நிர்வாகம் வேடிக்கை பார்த்து வருகிறது. மாடுகளை பிடிக்க சொல்லியும் இது வரை எவ்விதமான நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அரசு ஊழியர்கள் விவசாயிகள் வியாபாரிகள் பெரும் அவதிபடுகிறார்கள். மேலும் அடிக்கடி சாலையில் விபத்துகள் ஏற் படுகிறது. எனவே சாலையில் சுற்றி தெரியும் மாடுகளை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.