மக்களின் நலன் கருதி பட்ஜெட் தயாரிப்பு - காங்கிரஸ் நிர்வாகி

77பார்த்தது
மக்களின் நலன் கருதி பட்ஜெட் தயாரிப்பு - காங்கிரஸ் நிர்வாகி
தமிழக பட்ஜெட் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன் வரவேற்றார்.
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் புதிதாக வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை என்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. பள்ளிக்கல்வித்துறைக்கு 44 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதும், மகளின் உரிமைத்திட்டத்திற்கு 13. 720 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதும், 3 லட்சம் மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000/- வீதம் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 300 கோடிக்கு பணம் ஒதுக்கியுள்ளதும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. செங்கிப்பட்டியில் 120 கோடி ரூபாய் செலவில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்பதும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ரூ. 843 கோடி ஒதுக்கியுள்ளதும் சென்னை, மதுரை, திருச்சி, நீலகிரி ஆகிய ஊர்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்பதும், புதிதாக 10, 000 மகளிர் சுய உதவிக்குழுவை உருவாக்கி ரூ. 35, 000 கோடி கடன் தருவதாக அறிவித்துள்ளதும் தமிழகத்தில் புற்றுநோய் மேலாண்மை இயக்கம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளதும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுவாக மக்களின் நலன்கருதி தயாரிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி