திருப்பூருக்கு 2000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

58பார்த்தது
திருப்பூருக்கு 2000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு
தஞ்சையில் இருந்து திருப்பூருக்கு அரவைக்காக 2000 டன் நெல் சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் விளையும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரவை செய்து, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, அரசின் சேமிப்பு கிடங்குகளிலிருந்து மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் தஞ்சை ரயில் நிலையத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டன. பின்னர், அங்கிருந்து சரக்கு ரயிலில் 58 வேகன்களில் 2000 டன் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி