தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள சமயங்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மைனர் (வயது 40) இவரது மனைவி ராஜாத்தி. இருவரும் பைக்கில் தனது உறவினரின் திருமணத்திற்காக மணமகளுக்கு வாங்கிய 20 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம் 10, 000 ஐ பையில் வைத்து சென்று கொண்டிருந்தனர். ஒக்கநாடு மேலையூர் சாவடி பகுதியில் சென்ற போது பைக்கில் பின்புறமாக அமர்ந்திருந்த ராஜாத்தி கையில் வைத்திருந்த பணம் நகை பை காணாமல் போனது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர்கள் பதறித் துடித்தனர். இதுகுறித்து அறிந்த அப்பகுதி இளைஞர்கள் இதுகுறித்து பேஸ்புக், வாட்ஸ் அப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். இதை பார்த்த ஒக்கநாடு மேலையூர் விவசாயி ஜெயராமன் என்பவர் வாட்ஸ் அப் பதிவிட்ட இளைஞர்களை தொடர்பு கொண்டு சாலையில் கடந்த பையை தான் கண்டெடுத்ததாகவும், அதில் பணம் மற்றும் நகை இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து பணத்தை தவறவிட்ட வர்களும், இளைஞர்களும் ஜெயராமன் இருக்கும் பகுதிக்கு விரைந்து சென்று அடையாளத்தை தெரிவித்து பணம் நகையை பெற்றுக் கொண்டனர். மேலும் ஜெயராமனின் மனித சேவையை பொதுமக்கள் பாராட்டினர்.