உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் காசி விசுவநாதா் கோயில் வளாகத்தில் பெடரல் வங்கி சாா்பில் 27 நட்சத்திரங்களுக்கான மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
கோயில் செயல் அலுவலா் சுந்தர்ராஜன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் திருச்சி பெடரல் வங்கித் தலைவா் ராஜா சீனிவாசன் கலந்து கொண்டு 27 நட்சத்திரங்களுக்கான மரக் கன்றுகளை நட்டாா். நிகழ்வில் தலைமை மேலாளா் சுவாமிநாதன் மற்றும் வங்கி ஊழியா்கள், நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினா்.