ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோயில் 2009ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி மகாகும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து 14 ஆண்டுகளுக்கு மகாகும்பாபிஷேகம் செய்திட இந்துசமய அறநிலையத்துறை ரூ. 4.75 கோடியும், கோயில் நிர்வாகம் ரூ. ஒரு கோடியும், அறங்காவலர்கள் குழு சார்பில் ரூ. 50 லட்சமும், உபயதாரர்கள் மூலம் திருப்பணிகள் தொடங்க 2023ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்திட கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் தேக்கு மரம் டாரஸ் லாரியில் கொண்டு வரப்பட்டது. இதையறிந்த கோயில் செயல் அலுவலர் முருகன், அறங்காவலர் குழு சிதம்பரநாதன், சங்கர், சிவானந்தம், ராணி தனபால், மந்திரபீடேஸ்வரி பக்தர்கள் குழு சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்டு 2 கிரேன்கள் மூலமாக தேக்கு மரத்தை தூக்கி கோயில் வடக்கு பிரகாரத்தில் இறக்கி வைத்தனர்.
ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோயிலில் இருந்த கொடிமரம் பழுதானதால், புதிய கொடிமரம் அமைக்க திருப்பணிக்குழுவினர் முடிவெடுத்து, கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து ரூ. 12 லட்சம் மதிப்புள்ள 54 அடி உயரமான தேக்கு மரம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தேக்கு மரத்தை கோயிலில் ஆகம விதிமுறைகள்படி எத்தனை அடி உயரம் வைக்கலாம் என்பதை முடிவெடுத்து, ஆசாரிகள், கொத்தனார்கள் மூலமாக தேக்கு மரம் கொடிமரமாக மாற்றும் பணிகள் த