மாவட்ட ஆட்சியர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு

69பார்த்தது
மாவட்ட ஆட்சியர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு
சுவாமிமலையில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் கடைசி புதன்கிழமையன்று குறிப்பிட்ட கிராமங்களில் 24 மணிநேரம் தங்கி, பொதுமக்களிடம் நிறை, குறைகளை கேட்டறிந்து, நலத்திட்டம் உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு மனுக்களை பெறும் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சுவாமிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜோக்கப் தீடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை முறைகள், பற்றி கேட்டு அறிந்தார். பின்பு நோயாளிகளிடம் முறையான சிகிச்சைகள் வழங்கப்படுகிறதா என கேட்டு தெரிந்து கொண்டார். முன்னதாக கபிஸ்தலம் அருகே உள்ள சருக்கை ஊராட்சி கருப்பூர் படுகை கொள்ளிட ஆற்றின் குறுக்கே கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் குடந்தை கோட்டாட்சியர் பூர்ணிமா, பேரூராட்சிகள் பொது இயக்குனர் மஹும் அபூபக்கர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்கள் சேகர், ஜெயக்குமார், குடந்தை வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், மற்றும் அதிகாரிகள், மருத்துவர்கள், அலுவலர்கள், உள்பட பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி