தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மண்டல வாரியான வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்து கேட்டு கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.
கருத்து கேட்பு கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 8 மாவட்டங்களைச் சேர்ந்த 32 விவசாயிகள் பேசினார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியது, 8 மாவட்ட விவசாயிகள் கூறிய கருத்துக்களை ஏற்றுக்கொண்டு முதல்வரிடம் கொடுத்து வரும் நிதிநிலை அறிக்கையில் சேர்க்க பரிந்துரைக்கப்படும், கடந்த 4 ஆண்டுகள் ஆட்சியில் நேரடியாக சென்று விவசாயிகளின் கருத்துக்களை 75 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
5, 242 ஏக்கர் நிலங்களுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட்டு 30 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர், வறட்சி நிவாரணமாக ரூ. 1, 026 வழங்கப்பட்டு, 14 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். நான்காண்டுகளில் மொத்தம் 56 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர், 6, 546 கோடி ரூபாய் நிவாரணமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு நெல் கொள்முதல் நிலையங்கள் அதிகமாக திறக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு நிதி சரியாக வழங்கினால் நிறைய திட்டங்களை செய்வோம், 2 புயல் வீசியதால் தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கு ஒன்றிய அரசு கேட்ட நிவாரண தொகைகளை கொடுக்காமல் உள்ளது. அவர்கள் கொடுத்திருந்தால் தமிழகத்திற்கு முதல்வர் நிறைய செய்திருப்பார் என்றார்.