திருச்சி வயலூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம், கணபதி ஹோமம் மற்றும் கஜ பூஜையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இன்று (பிப்., 16) மாலை 4 மணிக்கு யாகசாலை பிரவேசத்துடன் முதற்கால பூஜை தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெறும். திங்கள்கிழமை காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடைபெறும். முக்கிய நிகழ்வாக 19ஆம் தேதி காலை 9.15 மணிக்கு சகலவிமானங்கள், ராஜகோபுரங்கள், சமகால கும்பாபிஷேகம் நடைபெறும்.