விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாகமணி என்பவர் நூதன முறையில் புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களை கடத்தியுள்ளார். சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில் தனியாக அழைத்து சோதனையிட்டனர். அப்போது, அவர் தனது முதுகு, வயிறு, இடுப்பு,தொடை, கால் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 120 மதுபானங்களை செல்லோ டேப் போட்டு ஒட்டியுள்ளார். இதனைப் பார்த்து ஷாக்கான போலீசார், அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.