சென்னை மணலியில் மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கேஸ் தயாரிக்கும் ஆலையில் இயந்திரம் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஆபரேட்டர் ஒருவர் உயிரிழந்தார். இவர், சுனாமி குடியிறுப்பைச் சேர்ந்த சரவணகுமார் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், ஆலையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது. காய்கறிகள், சானங்களை கொண்டு வாயு தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில் வாயு கசிவும் ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து வாயுவை கட்டுப்படுத்தினர்.