குடியரசு தினத்தை முன்னிட்டு, கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம், தில்லையம்பூர் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கிராம சபை கூட்டத்தில், மத்திய ஒன்றிய திமுக செயலாளருமான தி. கணேசன் அவர்கள், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ சுதாகர் அவர்கள், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் T. N. கரிகாலன் அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி தனி அலுவலர் ந. சிவகுமார் அவர்கள், ஆசிரியப் பெருமக்கள், திமுக நிர்வாகிகள், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், கலந்துகொண்டனர். பொதுமக்கள் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்களிடம் மனுக்களை வழங்கினார்கள். மனுக்களை உடனே அதிகாரிகளிடம் வழங்கி தீர்வு காண கேட்டுக்கொண்டார்.