கும்பகோணம்: கோ பூஜையை முன்னிட்டு கன்று குட்டிக்கு பெயர் சூட்டும் விழா

76பார்த்தது
கும்பகோணம் சோலையப்பன் தெருவில் ஸ்ரீ விஜயந்திர சுவாமி மடம் அமைந்துள்ளது. இங்கு காமதேனு கோசாலையில் நாட்டு பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோசாலையில் இருந்து பெறப்படும் பாலானது அபிஷேகம் மற்றும் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு காவேரி பெயர் கொண்ட உம்பளச்சேரி என்ற பசு இதுவரை காளை கன்று குட்டிகளை ஈன்று வந்த நிலையில், தற்போழுது முதல் முறையாக பெண் கன்று ஒன்றை ஈன்றுள்ளது. மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு கன்று பிறந்து 16 நாட்கள் ஆனதையடுத்து கன்று குட்டிக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு கன்று குட்டியை தொட்டிலிட்டு துர்கா என்ற பெயர் சூட்டப்பட்டது. மேலும் உலக நன்மைக்காக சிறப்பு கோபூஜையும் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி