கும்பகோணத்தில் லார்ஜில் தங்கி இருந்த கல்லூரி மாணவி உயிரிழப்பு

63பார்த்தது
கும்பகோணத்தில் லார்ஜில் தங்கி இருந்த கல்லூரி மாணவி உயிரிழப்பு
கும்பகோணத்தில் 17 வயது மாணவருடன் லாட்ஜில் தங்கி இருந்த 17 வயது கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
முதல் கட்ட விசாரணையில் மாணவிக்கு மாதவிடாய் பிரச்னை இருந்ததும், அதனால் ஏற்பட்ட அதீத ரத்தப்போக்கால் உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.அதாவது இருவரும் கோவிலுக்கு செல்ல திட்டமிட்ட நிலையில், மாணவிக்கு மாதவிடாய் பிரச்னை வந்ததும், இருவரும் துணி மாற்றிக்கொள்ள அறை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும் மாணவியின் மரணத்துக்கான உண்மையான காரணங்கள் வெளியாகவில்லை. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “உடல் கூராய்வு முடிவுகள் வெளிவந்த பின்னர் இது குறித்த உண்மைத் தகவல்கள் தெரியவரும்” என்றார்.

தொடர்புடைய செய்தி