ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வதேவ், இத்தாலியின் மேட்டியோ அர்னால்டி உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் மேட்டியோ அர்னால்டி கைப்பற்றினார். இறுதியில் ஆட்டத்தில் 5-7, 6-4, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் மேட்டியோ அர்னால்டியை, டேனியல் மெத்வதேவ் வீழ்த்தினார்.