செங்கோட்டையில் தனியார் அருவிகளுக்கு செல்லும் பாதை மூடல்

78பார்த்தது
செங்கோட்டையில் தனியார் அருவிகளுக்கு செல்லும் பாதை மூடல்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை குண்டாறு அணைப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் நீர்வீழ்ச்சிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் பலர் சென்று வந்தனர்.

இந்நிலையில் திடீரென அந்தப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா, முறையான பாதுகாப்பின்றி அருவி செயல்பட்டதால், சுற்றுலா பயணிகளை வெளியேற்றி, நிரந்தரமாக நுழைவு வாயிலுக்கு பூட்டு போட்டார்.

இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி