தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே நடுவப்பட்டி கிராமத்தில் சேர்ந்தவர் சதீஷ்குமார் மற்றும் முத்துமாரி என்பவர்கள் கூலி தொழிலாளி வேலை செய்து வருகின்றனர் இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டை பூட்டிக் கொண்டு பட்டாசு வேலைக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில் நேற்று மதியம் 1: 00 மணிக்கு அடுத்தடுத்து வீடுகளில் சதீஷ்குமார் மற்றும் முத்துமாரி என்பவர் வீட்டை பூட்டின் உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ரூ. 1லட்சம் 18 ஆயிரம் பணம் திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து திருவேங்கடம் போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சென்று தடயங்களை சேகரித்து விசாரணை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிந்து வீடு புகுந்து நகை பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.