ஆலங்குளம் பேரூராட்சியில் நிர்வாக அதிகாரியாக சிவக்குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பதவியேற்றதில் இருந்து பேரூராட்சி பகுதியில் குறிப்பிட்ட பகுதிகளில் துப்புரவு பணிகள் மேற்கொள்ள வில்லை என்றும், வளர்ச்சி பணிகள் குறித்து பேரூராட்சி தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் தன்னிச்சையாக செயல்படு வதாகவும் புகார்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் இதனை கண்டித்து வார்டு உறுப்பினர் வி ஜி எஸ் கணேசன் மற்றும் ஜெ. லிங்கவேல்ராஜ், காமராஜர் ஆதித்தனார் நேசமணி நாடார் மக்கள் முன்னேற்ற பேரவை தலைவர் வக்கீல் ஆ. ராஜா, காங்கிரஸ் ஓபிசி பிரிவு ஞானபிரகாஷ், ஆலங்குளம் மதிமுக நகர செயலாளர் கண்ணன், காங்கிரஸ் நகர செயலாளர் யோகராஜா, மார்க்கெட் ஜெயபாலன்,
காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் கருப்பசித்தன், ஆலங்குளம் நகர துணைத் தலைவர் லிவிங்ஸ்டன் விமல், ஆட்டோ லட்சுமணன், அலெக்ஸ் ராஜா, தமிழ்புலி கார்த்திக், ஒயிட் மோகன், ஆறுமுகராஜ் உள்ளிட்டோர் நேற்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்களை புறக்கணிக்கும், விரோதமாக செயல்படும் நிர்வாக அதிகாரியை கண்டிக்கிறோம், ஆலங்குளம் மக்களை வஞ்சிக்கும் நிர்வாக அதிகாரியை பதவி விலக்கு, குப்பைகள் அள்ளாத நிர்வாக அதிகாரி எங்களுக்கு வேண்டாம் என கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.