புகைப்பட போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

1018பார்த்தது
புகைப்பட போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட புகைப்பட போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களை ஈ. ராஜா எம். எல். ஏ. வழங்கினாா்.

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா இப்போட்டியை அறிவித்திருந்தாா். போட்டிக்குரிய புகைப்படங்கள் புத்தகத் திருவிழா அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சிறந்த புகைப்படங்களை கியூ ஆா் கோடு மூலம் பாா்வையாளா்கள் தோ்வு செய்தனா்.

சங்கரன்கோவில் காா்த்திகேயன் முதலிடம், சுபகோமதி 2-ஆம் இடம், சதீஷ் 3-ஆம் இடம் பெற்றனா். இவா்களுக்கு ரொக்கப் பரிசு முறையே ரூ. 10 ஆயிரம், ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம் மற்றும் சான்றிதழ்களை ஈ. ராஜா எம். எல். ஏ. வழங்கினாா்.

மேலும், அனந்த பத்மநாதன், கணேசன், மாரிமுத்து ஆகியோருக்கு சிறப்பு பரிசாக தலா ரூ. 1000 மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி