நாடகங்கள் மூலம் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

51பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலைய பிரதான சாலையில் தென்காசி மாவட்ட காவல்துறையின் சங்கரன்கோவில் உட்கோட்ட காவல் நிலையம் சார்பில் கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதை ஒழிப்பு உறுதிமொழி மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதில் குறிப்பாக போதைப் பொருள்களை உபயோகித்தால் வரும் தீமைகள் பற்றி மௌனநாடகம் மற்றும் நாடகம் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியை சங்கரன்கோவில் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுதிர் தொடங்கி வைத்தார்.
மேலும் கோட்டாட்சியர் கவிதா வட்டாட்சியர் பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்த நிலையில் பள்ளி முதல்வர் பழனிச்செல்வம், காவல் ஆய்வாளர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி