ஆலங்குளம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி

2270பார்த்தது
ஆலங்குளம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள கடங்கநேரி கிராமத்தில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக ஏராளமானோா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் அங்குள்ள தனியாா் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்த சுரேஷ் மகன் விகா ஸ்ரீனிவாசன்(10), கடந்த 10 தினங்களுக்கும் மேலாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். ரத்தப் பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் அந்த சிறுவன் உயிரிழந்தாா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி