தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள திருமலைபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தங்கள் பகுதியின் அடிப்படை தேவைகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் 5 பேர் திடீரென உள்ளிருப்பு போராட்டம் ஈடுபட்டனர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கவுன்சிலர்கள் கூறுகையில் தங்களது பகுதியில் உள்ள வார்டுகளில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என அதிகளிடம் குற்றம் சாட்டினர். பின்பு அதிகாரியின் பேச்சு வார்த்தை பின்பு கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.